உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் ரத ஊர்வலம்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் ரத ஊர்வலம்

திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, பூச்சொரிதல் அலங்கார ரத ஊர்வலம் நடந்தது.

திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசித்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு பிப்.11ம் தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் திருவிழா துவங்கியது.இன்று (பிப்.12ல்)  பூச்சொரிதல் அலங்கார ரத ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் சிறப்பு அலங்காரத்தில் கோட்டை மாரியம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  பிப்.14ல் சாட்டுதல், பிப்.16ல் கொடியேற்றம் நடக்கிறது. பிப்.27 ல் தசாவதாரம், மார்ச் 1ல் கொடியிறக்குதல், மார்ச் 2 ல் தெப்ப உற்ஸவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. கொரோனாவால் இந்தாண்டு அம்பாள் வீதியுலா கோயில் வெளிப்பிரகாரத்தில் மட்டுமே நடக்கும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !