உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொளஞ்சியப்பர் கோவிலில் ரூ.17.70 லட்சம் காணிக்கை

கொளஞ்சியப்பர் கோவிலில் ரூ.17.70 லட்சம் காணிக்கை

விருத்தாசலம் : விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் உண்டியல்களில், 17 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் காணிக்கை இருந்தன.

விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில், உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது.இந்து சமய அறநிலையத் துறை கடலுார் உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் மாலா, ஆய்வாளர் லட்சுமி நாராயணன் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், சி.எஸ்.எம்., கல்வி நிறுவன மாணவர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.அதில், 17 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கம், 38 கிராம் தங்கம் மற்றும் 910 கிராம் வெள்ளிப் பொருட்கள் இருந்தன. கடந்தாண்டு அக்டோபர் மாத திறப்பின்போது, 8 லட்சத்து 25 ஆயிரத்து 380 ரூபாய் ரொக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !