மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :1794 days ago
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், விடுமுறை தினத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால், அதிகாலை முதலே, ஏராளமான பக்தர்கள் குவியத்துவங்கினர்.நேற்று, சுப்பிரமணிய சுவாமி, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விடுமுறை தினம் மற்றும் காதலர் தினம் என்பதாலும், ஏராளமான பக்தர்கள் வந்ததால், அடிவாரத்தில், வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.