காளியாபுரம் சித்தி விநாயகர் கோவில் விழா
ADDED :1735 days ago
சூலூர்: காளியாபுரம் சித்தி விநாயகர் கோவில் ஆண்டு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். சூலூர் அடுத்த காளியாபுரத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவில் பழமையானது. இக்கோவிலில் திருப்பணிகள் நடந்து புனரமைக்கப்பட்டு இரு ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது.நேற்று முன்தினம் ஆண்டு விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு விநாயகர் அருள்பாலித்தார். பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.