ராமநாதீஸ்வரர் கோவிலில் வெள்ளிக் கவசம் சாற்று விழா
ADDED :1777 days ago
கண்டாச்சிபுரம் - கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வர் கோவிலில் மூலவருக்கு வெள்ளிக் கவசம் சாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.முன்னதாக திருத்தல இசைக்குழுவினர் இசையுடன் வெள்ளிக்கவசம் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.நேற்று மதியம் 12 மணி அளவில் யாகசாலை பூஜை, கலச ஸ்தாபன பூஜை நடைபெற்றது. பின்னர் வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவிச்சந்திரன், வெள்ளிக் கவச உபயதாரர்கள் சுப்ரமணியம், தாயுமானவன், அர்ச்சகர் பாலகிருஷ்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.