உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரேணுகா தேவி கோவில் கும்பாபிஷேக விழா

ரேணுகா தேவி கோவில் கும்பாபிஷேக விழா

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் ரங்கநாயகி நகரில் உள்ள ரேணுகாதேவி கோவிலில், கும்பாபிஷேகம் விழா நடந்தது. பெரியநாயக்கன் பாளையத்தில் ரங்கநாயகி நகரில் விநாயகர், ரேணுகாதேவி, பேரம்மாள் சமேத ஸ்ரீவெங்கிடபதி நாயுடு, சப்தகன்னிமார் கோவில் ஆகியவை தனித்தனியாக, நிர்மாணிக்கப்பட்டு, அர்த்தமண்டபம், மகா மண்டபம் ஆகியன 1988ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டன. இக்கோவில்களின் திருப்பணிகள் நிறைவு பெற்று 3வது மகாகும்பாபிஷேக விழா நடந்தது.  நிகழ்ச்சிகள், மகாகணபதி ஹோமத்துடன் துவங்கின. தொடர்ந்து, 101 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்து, நந்தா விளக்கு ஏற்றி, புற்று பூஜை நடந்தது. விழாவையொட்டி, ரேணுகாதேவி, பேரம்மாள் சமேத வெங்கிடபதி நாயுடு வரலாற்றுக் கதா காலட்சேபம் நடந்தது. விழாவில், புற்றுத் தங்கம் எடுத்தல், நந்தா விளக்குடன் சுவாமி அழைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, புற்றுக்கு அஷ்டபந்தனம், பாலாறு செல்லுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், பால் பொங்க வைத்தல், கும்பாபிஷேகம், ஜமதக்கனி - ரேணுகாதேவி திருக்கல்யாணம், வெங்கிடபதி நாயுடு - பேரம்மாள் திருக்கல்யாணம், அன்னதானம் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !