கோமாதா ஆலயத்தில் ஆவஹந்தி ஹோமம்!
ADDED :4875 days ago
புதுச்சேரி:கருவடிக்குப்பம் கோமாதா ஆலயத்தில் ஆவஹந்தி ஹோமம் நடந்தது.புதுச்சேரி சாய் சங்கர பக்த சபா சார்பில் காஞ்சி காமகோடி பரமாச்சாரியார் ஜன்ம தினத்தை முன்னிட்டு கருவடிக்குப்பம் கோமாதா ஆலயத்தில் வேதசாம்ராட் ராஜா சாஸ்திரிகள் தலைமையில் ஆவஹந்தி ஹோமம், கோ பூஜை நடந்தது.விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஸ்ரீசர்மா, இன்ஜினியர் ரமேஷ், ரவி, வாசு, முரளிகிருஷ்ணன், சுரேஷ், ராமகிருஷ்ணன், வேதராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் அனுஷம் பவுண்டேஷன் சார்பில் பின்தங்கிய மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.