காளியம்மன் கோயில் கும்பாபிேஷகம்
ADDED :1730 days ago
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி நாச்சியார்புரம் காளியம்மன் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. இதையொட்டிகணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, கோமாதா பூஜையுடன் பூர்ணாகுதி நடந்தது. இதனையடுத்து பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட நீரை பூஜை செய்து கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிேஷகம் செய்தனர். பக்தர்கள் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டது. காளியம்மன், செல்வ விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 16 வகையான அபிேஷகம் மகா தீபாராதனை நடந்தது.