கொல்லந்தோப்பு தர்மமுனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4876 days ago
கீழக்கரை: திருப்புல்லாணி அருகே கொல்லந்தோப்பு தர்மமுனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் விழா கடந்த 29ல் துவங்கியது. மூன்று நாட்களாக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு,நேற்று முன்தினம் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றினர். தர்ம முனீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிறப்பு அபிஷேகங்கள், தீப ஆராதனைகள் நடத்தப்பட்டு அன்னதானம் நடந்தது. திருப்புல்லாணி ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் முனியாண்டி, ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரி, துணை தலைவர் ஆலங்குளம் குருசாமி, மாவட்ட பஞ்., கவுன்சிலர் ராஜேந்திரன், ஊராட்சி தலைவர்கள் வெள்ளையம்மாள்(நயினாமரைக்கான்), லட்சுமி (ரெகுநாதபுரம்) உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழா கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.