ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் தேரோட்டம்
ADDED :4876 days ago
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக கொடியேற்றம் மே 26ந் தேதி நடந்தது. விழா நாட்களில் ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லிதாயார் பூதவாகனம், கைலாசம், யானை, வெள்ளிரிஷப, இந்திரவிமானம் போன்ற பல வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. ஆதிரெத்தினேஸ்வரர், பிரியாவிடையுடன் அமர்ந்த தேரையும், சிநேகவல்லிதாயார் அமர்ந்த தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மாலை 5 மணிக்கு மேலரதவீதியில் ரோட்டோரத்தில் தேர்சக்கரம் பதிந்தது. பின்பு மண் அள்ளும் இயந்திரம் மூலம் இழுக்கபட்டு தேர், நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது.