உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா துவங்கியது

பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா துவங்கியது

கூடலூர்: மசினகுடி, பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா, நடப்பு ஆண்டு எளிமையாக துவங்கியது.

நீலகிரியில் பிரசித்திபெற்ற மசினகுடி, பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா, நடப்பு ஆண்டு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசு வழிகாட்டுதல் முறைப்படி, எளிமையாக கொண்டாடபடுகிறது. அதன்படி, கொடியேற்றத்துடன் பொக்காபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா எளிமையாக துவங்கியது. திருவிழா, 23ம் தேதி வரை நடைபெறுகிறது. நடப்பு ஆண்டு சிறப்பு பேருந்து வசதியும் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்து அறநிலைய துறை அதிகாரிகள் கூறுகையில், கோவிலுக்கு வரும் பக்தர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, அரசு தெரிவித்துள்ள நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும், வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து சேவார்த்திகள் மற்றும் நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் கோவிலுக்கு வருவது தவிர்க்க வேண்டும் என, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !