உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செய்யாற்றில் அருணாசலேஸ்வரர் ரத சப்தமி தீர்த்தவாரி

செய்யாற்றில் அருணாசலேஸ்வரர் ரத சப்தமி தீர்த்தவாரி

கலசப்பாக்கம்: கலசப்பாக்கம், செய்யாற்றில் நடந்த, அருணாசலேஸ்வரர் ரதசப்தமி தீர்த்தவாரியை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். சூரியன் வடக்கு திசை நோக்கி நகரும் தை மாதத்தில், அமாவாசை முடிந்து வரும் ஏழாவது நாள் ரதசப்தமி. இதை‍யொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, வடக்கு திசையிலுள்ள, கலசப்பாக்கம் செய்யாற்றில், அருணாசலேஸ்வரர் ரத சப்தமி தீர்த்தவாரி நடந்தது.

நேற்று காலை, கோவிலிலிருந்து  உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் புறப்பட்டு,  கலசப்பாக்கம் செய்யாற்றுக்கு சென்றார்.  செல்லும் வழியிலுள்ள  தென்பள்ளிப்பட்டு கிராம மக்கள்,  உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கு மரியாதை செய்து,  மேளதாளத்துடன் செய்யாற்றிற்கு அழைத்துச்சென்றனர். அஙூகு தீர்த்தவாரி நடந்தது.   அப்போது,  கலசப்பாக்கம் கிராமத்திலுள்ள, திரிபுரசுந்தரி உடனாகிய திருமாமுடீஸ்வரரும் ரிஷப வாகனத்தில் செய்யாற்றில் எழுந்தருளி, உண்ணாமலையம்மன் சமேத அருணாசலேஸ்வரருடன் இணைந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !