உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்கமயில் வாகனத்தில் திருப்பரங்குன்றம் சுவாமி உலா

தங்கமயில் வாகனத்தில் திருப்பரங்குன்றம் சுவாமி உலா

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்கமயில் வாகனத்தில் சுவாமி உலா வந்தார்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று காலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர், சிம்மாசனத்தில் புறப்பாடாகி, 11 மாதங்களுக்கு பிறகு, தங்கமயில் வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியில் சுவாமி, தெய்வானை அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !