உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவில் செடல் திருவிழா

திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவில் செடல் திருவிழா

கடலுார் : திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவிலில், செடல் திருவிழா நடந்தது.

விழாவையொட்டி, கடந்த 10ம் தேதி மாலை சக்தி கரகம் கொண்டு வரப்பட்டு, 11ம் தேதி காலை கொடியேற்றுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, சுவாமி வீதியுலா நடந்தது.முக்கிய நிகழ்வான செடல் திருவிழா நேற்று நடந்தது. பகல் 12:00 மணியளவில் ஏராளமான பக்தர்கள் செடலணிந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மஞ்சள் நீர் உற்சவம், இரவு மடிபால் உற்சவம் நடக்கிறது. வரும் 26ம் தேதி உதிர வாய் துடைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !