உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணியில் ரத சப்தமி உற்ஸவம்

திருப்புல்லாணியில் ரத சப்தமி உற்ஸவம்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் 44-வது ஆக திகழ்கிறது. மாசி வளர்பிறையில் வரும் ரதசப்தமியை முன்னிட்டு காலையில் விசேஷ திருமஞ்சனம் நடந்தது.

கோயில் அருகேஉள்ள திருக்குறுங்குடி ஜீயர் மடத்தில் உற்சவ மூர்த்தியாக கல்யாண ஜெகநாத பெருமாள் எழுந்தருளினார். மாலையில் திருப்புல்லாணியில் நான்கு ரத வீதிகளிலும் உற்சவமூர்த்தி புறப்பாடு நடந்தது. நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் பாடப்பட்டு சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் நடந்தது. ரதசப்தமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !