உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்தசாமி கோவிலில் ரூ.23 லட்சம் காணிக்கை

கந்தசாமி கோவிலில் ரூ.23 லட்சம் காணிக்கை

வீரபாண்டி: காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், தைப்பூச தேரோட்டத்தையொட்டி, பக்தர்கள் காணிக்கை செலுத்த, 10க்கும் மேற்பட்ட உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. அத்திருவிழா நிறைவடைந்த நிலையில், நாமக்கல் மாவட்டம், ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் தமிழரசு தலைமையில், நேற்று, காணிக்கை எண்ணும் பணி நடந்தது. ஆட்டையாம்பட்டியை சேர்ந்த, 15க்கும் மேற்பட்ட பக்தர்கள், தனியார் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அப்பணி, வீடியோ பதிவு செய்யப்பட்டது. அதில், 29.5 கிராம் தங்கம், 220 கிராம் வெள்ளி, 23 லட்சத்து, 41 ஆயிரத்து, 731 ரூபாய் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !