பழநியில் வால்பாறை பக்தர்கள் பறவை காவடி
ADDED :1931 days ago
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து பாதயாத்திரையாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர். சண்முக நதியில் புனித நீராடி உடல் முழுவதும் அலகு குத்தினர். ஒன்பது பக்தர்கள் அலகு குத்தி, அலங்கரிக்கப் பட்ட ராட்சத கிரேனில் தொங்கியபடியே மேளதாளத்துடன் வந்தனர். மலையை கிரிவலம் வந்து பாதவிநாயகர் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தி நிறைவு செய்தனர். மலைமேல் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.