அவிநாசி பட்டத்தரசியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
அவிநாசி: அவிநாசி சுகாதார ஊழியர் வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
அவிநாசி சுகாதார ஊழியர் வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன்,ஸ்ரீ பட்டத்தரசியம்மன்,ஸ்ரீ கருப்பராயன்,ஸ்ரீ கன்னிமார் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த மூன்றாம் தேதி கணபதி ஹோமம்,அம்மனுக்கு காப்பு கட்டுதல்,கிராம சாந்தி ஆகியவற்றுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று படைக்கலம் எடுத்தல்,பொங்கல் வைத்தல்,கிடாய் வெட்டுதல், மாவிளக்கு எடுத்தல், அலகு குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகிறது. சுகாதார ஊழியர் விதி பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.