மழை வேண்டி மயிலம் பழங்குடி மக்கள் சிறப்பு பூஜை
ADDED :115 days ago
மயிலம்: மயிலம் பழங்குடியின மக்களின் குல தெய்வமான கன்னியம்மன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
அதனையொட்டி, மயிலம் மலையடிவாரத்தில் உள்ள மயிலாடும் பாறை அருகே பூங்கரகம், கன்னியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். மயிலத்தில் உள்ள கன்னியம்மன் கோவிலில் மதியம் 12:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் மற்றும்மகா தீபாராதனை நடந்தது. 1:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. மாலை 4:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், 5:00 மணிக்கு மயிலம் பஸ் நிலையம் அருகே பாரம்பரிய இசையுடன் அம்மன் பக்தி பாடல்களை பழங்குடி மக்கள் பாடினர். இரவு 7:00 மணிக்கு கிராம பழங்குடியின மக்கள் மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்தினர். ஏற்பாடுகளை பழங்குடியின விழாக் குழுவினர் செய்தனர்.