உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு

செல்லியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு

திட்டக்குடி:  திட்டக்குடி அடுத்த கொடிக்களம் செல்லியம்மன் கோவிலில் பவுர்ணமியையொட்டி ஆயிரத்து எட்டு திருவிளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

திட்டக்குடி அடுத்த கொடிக்களம் செல்லியம்மன் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமியில திருவிளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். இம்மாத பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் இரவு ஆயிரத்து எட்டு திருவிளக்கு ஏற்றி சுமங்கலி பெண்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். பூஜையை பரமசிவம் குருக்கள் செய்து வைத்தார். நாடுநலம், உலக அமைதி வேண்டி நடந்த சிறப்பு வழிபாட்டில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !