மாசி மக பல்லக்கு உற்சவம்
ADDED :1690 days ago
வாலாஜாபாத் : திம்மராஜம்பேட்டை சிவன் கோவிலில், மாசி மக பல்லக்கு உற்சவம், நேற்று, வெகு விமரிசையாக நடைபெற்றது. வாலாஜாபாத் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பர்வதவர் தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில், நேற்று, 80ம் ஆண்டு மாசி திருவிழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, ராமலிங்கேஸ்வரருக்கு, பகல், 1:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பகல், 3:00 மணிக்கு, பல்லக்கில் எழுந்தருளிய சுவாமி, வீதியுலா வந்தார். ஏராளமானோர், ராமலிங்கேஸ்வரரை வழிபட்டனர்.இன்று மாலை, இளையனார் வேலுார் பாலசுப்ரமணிய சுவாமி மற்றும் ராமலிங்கேஸ்வரர் எழுந்தருளும், சுந்தராந்தோப்பு உற்சவம் நடைபெற உள்ளது.