உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடம்பர் கோவில் மாசி மக திருவிழா தேரோட்டம்

கடம்பர் கோவில் மாசி மக திருவிழா தேரோட்டம்

குளித்தலை: கடம்பர் கோவில் மாசி மக பெருந்திருவிழா தேரோட்டம் நடந்தது. குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவிலில், மாசி மக பெருந்திருவிழா கடந்த, 17ல் தொடங்கியது. 23 காலை, 10:00 மணியளவில் திருக்கல்யாண நிகழ்ச்சி; தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு சுவாமி திருவீதி உலா நடந்தது. நேற்று காலை, திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், சிவனடியார்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து வந்தனர். வரும், 2ம் தேதியுடன் முடிவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !