சங்கராபரணி ஆற்றங்கரையில் மாசி மக தீர்த்தவாரி
ADDED :1764 days ago
திருக்கனுார் : கூனிச்சம்பட்டு சங்கராபரணி ஆற்றில் நடந்த மாசி மகத் தீர்த்தவாரியில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு- மணலிப்பட்டு கிராமத்திற்கு இடையேயுள்ள சங்கராபரணி ஆற்றங்கரையில் மாசி மகத் தீர்த்தவாரி நிகழ்ச்சிநடந்தது.தீர்த்தவாரியில் கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு, செட்டிப்பட்டு, கே.ஆர்.பாளையம், சித்தலம்பட்டு கிராமங்களை சேர்ந்த சுவாமிகள் பங்கேற்று, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் மக்கள் தரிசனம் செய்தனர்.