எமனின் வேறு பெயர்கள்
ADDED :1692 days ago
எமன் என்ற வார்த்தையை ‘இயமன்’ என்று எழுதுவதே சரியானது. இதற்கு ‘எல்லாவற்றையும் அடக்குபவன்’ என்று பொருள். வாழும் காலத்தில் மனிதன் யாருக்கும் அடங்காமல் மமதையுடன் ஆட்டம் போடுவான். எமன் பாசக்கயிறை வீசி விட்டால், ஆட்டபாட்டம் அடங்கி விடும். உயிரையும், உடலையும் பிரித்து கூறுபோடுபவன் என்பதால் எமனுக்கு ‘கூற்றுவன்’ என்றும் பெயருண்டு.
‘சமன்’ என்றும் எமனுக்கு பெயருண்டு. மனிதர்கள், மற்ற உயிர்கள் என்ற வேறுபாடு கிடையாது. யாருடைய உயிரை வேண்டுமானாலும் முன்னறிவிப்பு இன்றி எடுக்கும் அதிகாரம் கொண்டவன். ‘வலிமை மிக்கவன்’ என்பதால் ‘மறலி’ எனப்படுகிறான். உயிர்களின் வாழ்க்கையை அந்தத்துக்கு (முடிவு) கொண்டு வருவதால் அந்தகன் என்றும் சொல்வர்.