உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பயனுள்ளதை எண்ணுங்கள்

பயனுள்ளதை எண்ணுங்கள்

விளக்குகிறார் ரமணர்

* மனதில் எழும் ஒவ்வொரு நல்ல எண்ணமும் நிச்சயம் பலன் தரும்.  
* தவறான செயல்களில் ஈடுபட்டு அகந்தையால் அதை மறைக்காதீர்.
* ஒழுக்கமுடன் வாழ்வதே நிம்மதியுடன் வாழ்வதற்கான வழி.  
* ஐம்புலன்களுக்கு அடிமையான மனம் எப்போதும் அலைபாயும்.  
* சீடனின் மனதை சுதந்திரமாக்கும் சக்தி கொண்டவரே நல்ல குருநாதர்.
* நம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான வழிகாட்டி.
* அமைதி, பொறுமை, மன்னிக்கும் குணம் கொண்டவரே நல்ல மனிதர்.
* பேசுவதை விட மவுனமாக இருப்பதால் அதிக நன்மை கிடைக்கும்.
* வாயை மூடிய பின் மனம் அலை பாய்ந்தால் அது மவுனமாகாது.
* ஒரே எண்ணத்தோடு இருக்கும் போது மனதின் சக்தி சேமிக்கப்படுகிறது.  
* எண்ணங்கள் நாலாபுறமும் சிதறிக் கொண்டிருந்தால் மனம் பலவீனம் பெறும்.    
* வலையில் பிடிபடும் பறவை போல மூச்சுப்பயிற்சியால் மனதை அடக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !