உதவிக்கரம் நீட்டுங்கள்
ADDED :1989 days ago
ஒருமுறை பள்ளிவாசலில் இருந்த இமாம் ஹூைஸனிடம் ஒரு நபர் குடும்ப கஷ்டத்தைச் சொல்லி உதவி கேட்டார். இதிகாபில் (இறை தியானத்தில்) இருப்பதால் என்னால் வர முடியாது என மறுத்தார் இமாம்.
உடனே அந்த நபர் இமாமின் சகோதரரிடம் உதவி கேட்டார். தேவையான உதவிகளைச் செய்வதாகச் சொல்லி பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டார். தன்னுடன் வந்ததன் காரணத்தை அறிய விரும்பினார் உதவி கேட்ட நபர்.
‘‘துன்பப்படும் நேரத்தில் சக மனிதரின் தேவையை நிறைவேற்றினால் ஹஜ், உம்ரா யாத்திரை செய்த நன்மை கிடைக்கும். ஹஜ், உம்ரா இரண்டின் பயன் கிடைப்பதால் புறப்பட்டு வந்தேன்’’ என்றார்
சக மனிதர்களின் தேவையறிந்து உதவுவது பத்தாண்டுகள் இதிகாப் இருப்பதை விட உயர்வானது.