உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உழைத்து வாழ வேண்டும்

உழைத்து வாழ வேண்டும்


 குடும்பத்தை காப்பாற்ற உழைப்பின் மூலம் சம்பாதியுங்கள். நல்ல வழியில் வரும் பணம் குறைவாக இருந்தாலும், அதற்குள் வாழ்க்கையைத் திட்டமிடுங்கள். நோய், அவசர செலவு என ஏதோ ஒரு காரணத்தால் இழப்பு நேர்ந்தாலும், எப்படி சமாளிக்கலாம் என சிந்தியுங்கள். கூலி வேலை செய்து கூட குடும்பத்தை நடத்தலாம். ஆனால் எந்த சூழலிலும் பிச்சை எடுத்து வயிறு வளர்ப்பது கூடாது.  
 ‘‘பிச்சை எடுக்க விரும்பாமல், குடும்பத்தினருக்காக உழைத்து பணம் சம்பாதிப்பவர் பிரகாசமான முகத்துடன் மறுமையில் இறைவனைச் சந்திப்பார்’’ என்கிறார் நாயகம். ‘பிச்சை எடுத்தாவது குடும்பத்தை காப்பாற்றுவேன்’ என விளையாட்டாகக் கூட  சொல்லாதீர்கள். ‘‘எப்பாடுபட்டாவது சம்பாதித்து குடும்பத்தை தலைநிமிரச் செய்வேன்’’ என்று சொல்லுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !