உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா

சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா

குமாரபாளையம்: குமாரபாளையம், வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினசரிஅம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இன்று தீர்த்தக்குட ஊர்வலம், சிறப்பு அபிஷேக,அலங்கார, ஆராதனை; நாளை, சக்தி அழைத்தல், பூவோடு இறக்குதல்,பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூங்கரகம், அக்னிசட்டி, அலகு குத்துதல், வாண வேடிக்கை மற்றும் பெரும் பூஜை நடைபெற உள்ளது. வரும், 4ல் மஞ்சள் நீர் திருவீதி உலா, கம்பம் மற்றும் முளைப்பாரி காவிரி ஆற்றில் விடுதல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !