உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த 5ம் ஆண்டையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 5ம் ஆண்டையொட்டி நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், யாகசாலை பூஜைகள் நடந்தன. அப்போது சுவாமிக்கு சந்தனம், பன்னீர், பால், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமிக்கு தீபாராதனை வழிபாடுகள் நடந்தன. இந்த நிகழ்ச்சியில் குமரகுரு எம்.எல்.ஏ, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மயில்மணிகுமரகுரு, மூத்த வழக்கறிஞர் அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !