உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாடிக்கொம்பு கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

தாடிக்கொம்பு கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

திண்டுக்கல்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷன பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு ஆறு கால சிறப்பு பூஜை நடந்தது. பதினெட்டு வகை அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !