முதுகுளத்தூர் அருகே கோயில் சிலை சேதம், பணம் திருட்டு
ADDED :1697 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே கோயிலில் உள்ள சாமி சிலையை சேதப்படுத்திவிட்டு உண்டியல் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
முதுகுளத்தூர்-கடலாடி சாலை விளாத்திக்கூட்டம் அருகே ஆடுங்களரி அய்யனார் கோயிலில் வழக்கமான பூஜைக்காக பூசாரி சண்முகநாதன் கோயிலுக்கு சென்றுள்ளார்.மர்மநபர்கள் கோயிலில் உள்ள அனுமன் சிலையை சேதப்படுத்தியும்,விளக்கு, உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.இதுகுறித்து பேரையூர் போலீசார் வழக்குபதிவு செய்து சிலையை சேதப்படுத்திய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.