உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நள்ளிரவில் நடந்த காமன் கூத்து விழா: பக்தர்கள் பங்கேற்பு

நள்ளிரவில் நடந்த காமன் கூத்து விழா: பக்தர்கள் பங்கேற்பு

கூடலூர்: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில், காமன் கூத்து திருவிழா நள்ளிரவில் பாரம்பரியம் மாறாமல் நடந்தது

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஆமைக்குளம் பகுதியில் பங்குனி மாதத்தில், தன் தவத்தை கலைக்கும் மன்மதனை, சிவன், நெற்றி கண்திறந்து எரிக்கும் காமன் கூத்து திருவிழா பாரம்பரியம் மாறாமல், நடந்து வருகிறது. இதன் 30வது ஆண்டு விழா பிப்., 16 ல் துவங்கி நடந்தது. இதன் நிறைவு விழா, நேற்று முன்தினம், இரவு 8:00 மணிக்கு ஆசிர்வாதம் பெறும் நிகழ்ச்சியுடன் துவங்கி, சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. நள்ளிரவு 12:00மணிக்கு வில்பாலித்தல், பட்டத்து தேர் கன்திறந்து ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, ரதி - மன்மதன் திருமணம்; மொய் விருந்துபசாரம் நடந்தது. நள்ளிரவு 1:30 மணிக்கு சிவபெருமான் தியானத்தில் அமரும் நிகழ்ச்சி; தூதுவன் வருகை, தட்சன் யாகம்; வீரபத்திரன் வருகை; தட்சன் வதைப்படலம்; அதிகாலை 5.15 மணிக்கு எமன் பாசக்கயிற்றுடன் காளையன் சிங்கிலி வருகை நிகழ்ச்சிகள் நடந்தது. அதிகாலை 5:30மணிக்கு தன் தவத்தைக் அலைக்கும் மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண் மூலம் எரிக்கும் நிகழ்ச்சி தத்துரூபமாக நடந்தது. இந்நிகழ்ச்சியை, பக்தர்கள் கண்விழிக்க பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !