நாமக்கல் காலபைரவருக்கு சிறப்பு பூஜை
ADDED :1708 days ago
நாமக்கல்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, நாமக்கல் காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. நாமக்கல் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள அக்னி காலபைரவருக்கு, தேய்பிறை அஷ்டமி விழா சிறப்பாக கொண்டாப்பட்டது. நேற்று மாலை, 4:30 மணிக்கு மஞ்சள், குங்குமம், தேன், பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவையால் சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஏலக்காய், திராட்சை, அதிரச மாலைகள் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டன. அதேபோல், உற்சவருக்கும் அபி ?ஷகம் செய்யப்பட்டது. பின், சுவாமிக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திருவாசகம் பாடியும், தேங்காய், எலுமிச்சை, பூசணி ஆகியவற்றில் நெய் தீபம் ஏற்றி நேர்த்தி கடன் செலுத்தினர்.