வீரபக்த ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றல்
ADDED :1756 days ago
மல்லசமுத்திரம்: காளிப்பட்டி வீரபக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு, 1,008 வடைமாலை சாற்றி வழிபாடு நடந்தது. மல்லசமுத்திரம் அடுத்த, காளிப்பட்டியில் பிரசித்தி பெற்ற கந்தசாமி கோவில் பின்புறத்தில் சென்றாய பெருமாள் கோவில் வளாகத்தில் வீரபக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. நேற்று, மாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு, 1,008 வடைமாலை சாற்றி, சிறப்பு அபி?ஷகம் நடந்தது. சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.