உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மெய்கண்டார் கோவிலில் சுவாதி சிறப்பு வழிபாடு!

மெய்கண்டார் கோவிலில் சுவாதி சிறப்பு வழிபாடு!

திருவெண்ணெய் நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டார் கோவிலில் சுவாதி சிறப்பு வழிபாடு நடந்தது. திருவெண்ணெய்நல்லூரில் சைவசிந்தாந்தத்தை உலகுக்கு உணர்த்திய மெய்கண்டார் ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் ஜீவசமாதியடைந்தார். இதையடுத்து மாதாந்திர சுவாதி சிறப்பு வழிபாடு கடந்த 2ம் தேதி காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் நடந்தது. ஆத்தூர் சித்தாந்த பேராசிரியர் ராஜேந்திரன் சித்தாந்த செம்பொருள் துணிவு என்ற தலைப்பில் பேசினார். துறையூர் ஓதுவார் ஜெயச்சந்திரன் தலைமையில் திருமுறை இன்னிசை நடந்தது. ஆத்தூர், புதுப்பட்டு, தேவபாண்டலம், ஓசூர், உளுந்தூர்பேட்டை ஆகிய சைவசித்தாந்த பயிற்சி மையங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மெய்கண்டார் மடத்தின் அம்பலவாணத்தம்பிரான் சுவாமிகள், ஜம்புலிங்கம், அச்சுதன், ராஜேஷ்கண்ணா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !