உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வளவனூரில் திருவிளக்கு பூஜை!

வளவனூரில் திருவிளக்கு பூஜை!

விழுப்புரம்: வளவனூர் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சுப்ரமணியர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. வளவனூர் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ரயிலடி சித்துபாலா சுப்ரமணியர் கோவிலில் மூன்றாம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக மூலவருக்கு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது. பின் திருவிளக்கு பூஜையை சிவராஜன் குருசாமி மற்றும் குழுவினர் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் சிகாமணிராஜன், மாவட்ட செயலாளர் முருகேசன், துணைத் தலைவர் விக்ரமன், மாவட்ட புரவலர் பியாரேலால் சேட், கடலூர் மாவட்ட முன்னாள் செயலர் சிவராமன், அன்னதான கமிட்டி தலைவர் தட்சணாமூர்த்தி, மாவட்ட பொருளாளர் திருநாவுக்கரசு மற்றும் கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !