சிவன் கோவிலில் 108 கலசாபிஷேகம்
ADDED :4873 days ago
கள்ளக்குறிச்சி: காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தியையொட்டி நீலமங்கலம் காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 108 கலசாபிஷேகம் நடந்தது. உற்சவத்தையொட்டி காலையில் வினாயகர் வழிபாடு, புன்யாவசனம் ஆகியவற்றுக்கு பின் சிவலிங்க வடிவில் 108 கலசங்களை ஆவாஹனம் செய்து ருத்ர மந்திரங்களை வாசித்து பூஜை செய்தனர். அதனை தொடர்ந்து 37 வகையான அபிஷேகங்கள் காமாட்சியம்மனுக்கும், ஏகாம்பரேஸ்வரருக்கும் செய்து வைக்கப்பட்டது. மங்கள வாத்தியங்கள் முழங்க 108 கலசங்களில் உள்ள புனித நீரை ஊற்றி கலசாபிஷேகம் செய்தனர். அலங்கார தீபங்கள் வழிபாடு, 16 வகை உபசாரங்கள் ஆகியவற்றுக்குப்பின் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிவபக்தர்கள் தேவாரம், திருவாசகம் வாசித்தனர். காஞ்சி சங்கரா கலை அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் வைபவத்தை நடத்தி வைத்தனர்.