திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்மர் பிரம்மோற்சவ தேரோட்டம்
ADDED :1710 days ago
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், நரசிம்மர் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
மார்ச், 6ம் தேதி காலை, 6:00 மணிக்கு சிறிய தங்க பல்லக்கு சேவையும், அடுத்த நாள் ஏகாந்த சேவையும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (மார்ச், 8ல்) கோலாகலமாக நடைபெற்றது. இன்று காலை, 5:00 - 6:00 மணிக்குள், நரசிம்மர் தேரில் எழுந்தருள, காலை, 7:00 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டு, தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. மார்ச், 11ம் தேதி இரவு, 9:00 மணிக்கு, சப்தாவர்ணம் எனும் சிறிய திருத்தேர் நிகழ்வுடன், பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.