விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் மஹா சிவராத்திரி வழிபாடு
ADDED :1878 days ago
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் மஹா சிவராத்திரி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் நேற்று மஹா சிவராத்திரி என்பதால், கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிபாட்டில் பக்தர்கள், கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.