பெரியபட்டினம் குதிரைமலையான் கோயிலில் மாசி களரி
ADDED :1710 days ago
பெரியபட்டினம்: பெரியபட்டினம் குதிரைமலையான் கருப்பண்ணசாமி கோயிலில் சிவராத்திரி மாசி களரி பாரிவேட்டை விழா நடந்தது.மூலவர் குதிரைமலையான், கருப்பண்ண சாமி, சப்த கன்னிமார்கள்உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனை நிறைவேற்றப்பட்டது. கோயில் முன்பு பெண்கள் பொங்கலிட்டனர். ஆடு, கோழிகளை நேர்த்திக்கடனாக பலியிட்டனர். பூஜைகளை கோயில் பூஜாரி ராஜன் செய்திருந்தார். ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டிபேராசிரியர் ஜீவானந்தம், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.* பெரியபட்டினம் அழகுநாயகி அம்மன் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு கோயில் முன்பு பூக்குழியில் ஏராளமான பக்தர்கள்இறங்கினர். மாவிளக்கு ஏற்றி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.