சின்ன காஞ்சிபுரம் கூரத்தாழ்வான் கோவிலில் திருஅவதார உத்சவம்
ADDED :2 days ago
காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் கூரத்தாழ்வான் கோவிலில் திருஅவதார உத்சவம் நேற்று நடந்தது.
சின்ன காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெருவில், கூரத்தாழ்வான் கோவிலில் ஆண்டுதோறும் கூரத்தாழ்வான் அவதரித்த தை மாத அஸ்தம் நட்சத்திர தினத்தன்று திருஅவதார உத்சவம் நடந்து வருகிறது. அதன்படி, தை மாதம் அஸ்தம் நட்சத்திரமான நேற்று மாலை 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியரு டன் மலர் அலங்காரத்தில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், கோவிலில் இருந்து புறப்பட்டு வீதியுலாவாக டி.கே.நம்பி தெருவில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலி ல் எழுந்தருளுளினார். அங்கு கூரத்தாழ்வானுக்கு சாற்றுமறை, பெருமாள் திருவாராதனம், நிவேதனம் நடந்தது. திர ளான பக்தர்கள் பங்கேற்றனர்.