மங்களநாயகி கண்ணகிதேவி கோயிலில் மஹா சிவராத்திரி விழா
ADDED :1710 days ago
கூடலுார் : கூடலுார் பளியன்குடி அருகே உள்ள மங்களநாயகி கண்ணகிதேவி கோயிலில் மாசி மஹா சிவராத்திரி விழா நடந்தது.நள்ளிரவில் முப்பத்தி முக்கோடி தேவர்களும், நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிமார்கள் முன்னிலையில் தாமரைகமல ஜோதிலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம் கந்தவேல் நவரிஷி தலைமையில் நடந்தது. கண்ணகிதேவி, கண்ணாத்தாளுக்கு பல்லயங்கள் இட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.