சூலூர் வட்டார கோவில்களில் சிவ ராத்திரி
ADDED :1638 days ago
சூலூர்: சூலூர் வட்டார சிவன் கோவில்களில் நடந்த சிவ ராத்திரி பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சூலூர் வட்டாரத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில், சென்னியாண்டவர் கோவில், கணபதீஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் நேற்று முன்தினம் சிவ ராத்திரி பூஜை நடந்தது. நான்கு காலமும் சுவாமிக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள் கண்விழித்து பக்தி பாடல்களை பாடினர். நேற்று அதிகாலை நான்காம கால பூஜை முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.