உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் அமாவாசை தரிசனம்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் அமாவாசை தரிசனம்

 வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மாசி மாத அமாவாசை வழிபாட்டில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் தாணிப்பாறை மலையடிவாரத்தில் திரண்டிருந்தனர். உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னர் காலை 6:30 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கபட்டனர்.கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அபிேஷகங்கள் செய்யபட்டு பூஜைகள் செய்யபட்டது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசித்தனர்.நேற்று மட்டும் 8 ஆயிரம் பக்தர்கள் மலையேறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மலையேறும் வழி தொட்டிகளில் வைக்கபட்டிருந்த குடிநீர் காலியானதால் பக்தர்கள் தண்ணீருக்கு தவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !