உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குலதெய்வ கோயில்களில் கிடா விருந்து

குலதெய்வ கோயில்களில் கிடா விருந்து

 திருவாடானை : திருவாடானை, தொண்டியை சுற்றியுள்ள குலதெய்வ கோயில்களில் நேற்று 100க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிட்டு விருந்து நடந்தது.திருவாடானை அருகே பெருவண்டல், கரையக்கோட்டை, தொண்டி அருகே நம்புதாளை, கீழ்க்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குலதெய்வ வழிபாடுகள் நடந்தது. கருப்பர், காளி போன்ற கோயில்களில் 100க்கும் மேற்பட்ட கிடாக்களை பலியிட்டு விருந்து வைக்கபட்டது. உறவினர்கள், நண்பர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !