ரிஷப வாகனத்தில் தீர்த்தீஸ்வரர் பவனி
ADDED :1697 days ago
திருவள்ளூர் : பங்குனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, உற்சவர் சிவபெருமான் ரிஷப வாகனத்தில் பவனி வந்தார்.
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில், பங்குனி மாத பிரம்மோற்சவ விழா, கடந்த, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும், காலை, மாலை, உற்சவர், பல்வேறு அலங்கரிக்கப் பட்ட வாகனங்களில் எழுந்தருளி, வருகிறார். விழாவின், 5ம் நாளன்று, திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, பஞ்சமூர்த்தி தரிசனம் நடந்தது.விழாவின் ஆறாம் நாளான நேற்று, அஸ்மானகிரி மற்றும் யானை வாகன புறப்பாடு நடந்தது. இன்று, ரத உற்சவம் மற்றும் தடாக பிரதட்சனம் நடக்கிறது. தினமும், காலை, மாலை வேத பாராயணம் நடைபெற்று வருகிறது.