உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லை மாரியம்மன் கோவிலில் திருவிழா

எல்லை மாரியம்மன் கோவிலில் திருவிழா

ஈரோடு: ஈரோடு, வளையக்கார வீதி, பெரிய எல்லை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, கடந்த, 2ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து பால், தீர்த்தக்குட ஊர்வலம், அக்னிசட்டி, அலகு குத்துதல், மாவிளக்கு எடுத்தல், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பொங்கல் வைபவம் நேற்று நடந்தது. ஏராளமான பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். இதையொட்டி மூலவர் சந்தன காப்பு அலங்காரத்திலும், உற்சவர் சிம்ம வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !