மாங்கல்ய பலம் தரும் ரேணுகா
திருமணம் என்பது ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கை ஒப்பந்தம். வாழ்வில் சொந்தங்கள் சரியாக அமையாவிட்டாலும் வாழ்க்கைதுணை எனும் பந்தம் சரியாக இருந்தால் போதும் உலகையே வளைத்து விடலாம். மாறாக கிரக தோஷத்தால் பிரிந்து தவிப்போருக்கு வாழ்வு தர காத்திருக்கிறாள் சவுண்டாட்டி எல்லம்மா என்னும் ரேணுகா தேவி. கர்நாடகாவின் பெல்காமுக்கு அருகிலுள்ள இக்கோயிலை ஒருமுறை தரிசித்தாலும் பெண்களுக்கு மாங்கல்யம் நிலைக்கும்.
ஜமதக்னி என்னும் முனிவரின் மனைவி ரேணுகாதேவி. அவள் ஒருநாள் தண்ணீர் கொண்டு வர குளத்திற்கு சென்றாள். களிமண்ணால் பானை செய்து அதிலேயே தண்ணீர் எடுத்து வருவது அவளது வழக்கம். அன்று வான் வழியே கந்தர்வன் ஒருவனது நிழலை நீருக்குள் கண்டாள். ஒருகணம் அவனது அழகில் மயங்கினாள். உடனே அவளது பானை தண்ணீரில் கரைந்தது. மீண்டும் பானை செய்ய முயற்சித்தும் பலனில்லை. ஜமதக்னி முனிவர் ஆத்ம சக்தியால் குளத்தில் நடந்ததை அறிந்தார். கோபத்துடன் மனைவியின் தலையை கோடரியால் வெட்டும்படி மகனான பரசுராமனுக்கு உத்தரவிட்டார். அவனும் தந்தையின் கட்டளையை ஏற்று தலையை துண்டித்தான். அதற்கு ஈடாக வரம் அளிப்பதாக ஜமதக்னி வாக்கு கொடுத்தார். வரத்தின் பலத்தால் பரசுராமன் மீண்டும் தாயை உயிர் பெறச் செய்தான். இந்த ரேணுகாதேவியே இங்கு மூலவராக இருக்கிறாள்.
எப்படி செல்வது
* பெங்களூரிலிருந்து பெல்காம் செல்லும் வழியில் தார்வார் என்னும் இடத்திலிருந்து பிரிந்து செல்லும் பாதையில் சென்று சவுண்டாட்டியை அடையலாம். அங்கிருந்து 5 கி.மீ.,
* பெல்காமிலிருந்து 78 கி.மீ.,