சிந்தனை செய் மனமே!
ADDED :1809 days ago
* நீங்கள் செய்த உதவியை சிந்திப்பதை விட இறைவன் செய்த உதவியை சிந்திப்பீர்.
* செய்த நன்மைகளை விட உங்களால் நிகழ்ந்த பாவங்களை சிந்தியுங்கள்
* மற்றவரின் குற்றங்களை விட உங்களின் குற்றங்களை நோட்டமிடுங்கள்.
* தண்ணீரில் உப்பு கரைவது போல பாவங்கள் நற்குணத்தால் கரையும்.
* அன்பு செலுத்தாதவன் அன்பை பெறுவதற்கு தகுதியற்றவன்.
* தீய செயலில் இருந்து விலகுவதே தர்மம் தான்.
* உங்களை நம்பிச் சொல்லும் செய்தியை அடைக்கலப் பொருள் போல் காப்பாற்றுங்கள்.
– பொன்மொழிகள்