வானம் கூட வசப்படும்
ADDED :1963 days ago
மனம் பற்றி மாணவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார் ஆசிரியர். அதற்காக கண்ணாடி டம்ளர் ஒன்றை கையில் பிடித்தபடி, . ‘‘இது மிக லேசான பொருள் தான். இருந்தாலும் ஒரு மணிநேரம் தொடர்ந்து பிடித்தால் கை வலிக்கும். அதுவே பல மணி நேரமாகி விட்டால் கை மரத்துப் போகும். எடை முக்கியமல்ல. அதை எவ்வளவு நேரம் கையில் பிடித்திருக்கிறோம் என்பதே முக்கியம். மனதிற்கும் இந்த அடிப்படை பொருந்தும். வாழ்வில் சந்திக்கும் துன்பம், பிரச்னை, இழப்பு ஆகியவற்றை மனதிலிருந்து இறக்கி விட்டால் பாதிப்பு ஏற்படாது. மாறாக அவற்றை சுமந்தபடி இருந்தால் வேதனை அதிகரிக்கும்.
மனதை கையாளத் தெரிந்தவனுக்கு வானம் கூட வசப்படும்.